Tamil News

ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்க கமல் திட்டம்

நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பணிகள் காரணமாக புதிய படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்து இருந்தார். தற்போது மீண்டும் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபடத் தயாராகி உள்ளார். அவர் கைவசம் இந்தியன் 2, விக்ரம் ஆகிய 2 படங்கள் உள்ளன. இந்தியன் 2 படப்பிடிப்பு பல மாதங்களாக முடங்கி உள்ளது.

இதனால் இயக்குனர் ஷங்கர் தெலுங்கு படத்தையும், இந்தியில் அந்நியன் பட ரீமேக்கையும் இயக்க போகிறார். இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படத்தை ஷங்கர் இயக்க தடை கேட்டு லைகா நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது.

இந்நிலையில், கமல்ஹாசன் இந்த பிரச்சனையில் தலையிட்டு ஷங்கரையும், தயாரிப்பாளரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் படத்தின் கதையில் சிறிய மாற்றம் செய்யும்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கமல் அறிவுறுத்தி இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. அந்தப் பணியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விக்ரம் படத்திலும் கமல் நடிக்க இருக்கிறார். இரு படங்களிலும் மாறி மாறி நடிக்க கமல் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Suresh

Recent Posts

வரப்போற வாரங்களில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப்போவது இதுதான்,வைரலாகும் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில்…

32 mins ago

கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட ரவீனா,வைரலாகும் போட்டோ

தமிழ் சினிமாவில் ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் ரவீனா. இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மௌன…

45 mins ago

நடிகர் விஷால் மேனேஜர் கண் முன்னே நடந்த சோகம்

கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் குளிக்க சென்ற திருச்சி SRM மருத்துவ பயிற்சி மருத்துவர்கள் 8பேர் அடித்து சென்ற போது…

1 hour ago

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

வாழை இலையில் சாப்பிடுதல் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பொதுவாகவே வாழை மரத்தில் தண்டு ,இலை ,காய், பூ, பழம்…

2 hours ago

சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் அன்பு என்ற புதிய சேவையை தொடங்கி வைத்த சமந்தா மற்றும் டாக்டர் மரியஜீனா ஜான்சன்

சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் அன்பு என்ற புதிய ஆரோக்கிய மேம்பாட்டிற்கான "ஷீ ஃபர்ஸ்ட்" சேவையை டாக்டர் மரியஜீனா ஜான்சன் மற்றும்…

3 hours ago

சிறகடிக்க ஆசை சீரியலை விமர்சிக்கும் ரசிகர்கள், காரணம் என்ன தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும்…

3 hours ago