Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் சீசன் 7காக சம்பளத்தை உயர்த்திய கமல்ஹாசன்.எத்தனை கோடி தெரியுமா?

Kamal salary 100 crores in BB season 7

இந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபடத் தொடங்கி விட்டார்.

அதேசமயம் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்களை நிறைவு செய்துள்ளது. இவை அனைத்தையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் அடுத்ததாக ஏழாவது சீசன் வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்த ஏழாவது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்குகிறார். ஆனால் ஆறாவது சீசனுக்கு 100 கோடி சம்பளம் வாங்கியது போல இந்த முறை 100 கோடிக்கு தொகுத்து வழங்க முடியாது என சொல்லி தன்னுடைய சம்பளத்தை ரூபாய் 130 கோடியாக உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Kamal salary 100 crores in BB season 7
Kamal salary 100 crores in BB season 7