தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே.
இப்படியான நிலையில் தற்போது இவர் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இருப்பினும் இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
