கோலிவுட் திரை உலகில் உலக நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் திருப்பதியில் நாளை மறுநாள் 21 ஆம் தேதி முதல் துவங்க இருப்பதாக புதிய தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#Indian2 Next Schedule Starts From JANUARY 22 at Tirupati..🤙🏾🔥
Music By #Anirudh – Directed By #Shankar & Produced By #LYCA 💥#KamalHaasan | #KajalAggarwal
— Saloon Kada Shanmugam (@saloon_kada) January 20, 2023