“நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் ‘கேஎச் 234’ படத்தில் நடிக்கவுள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணையவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. இதையடுத்து இப்படத்தின் முன்னோட்ட காட்சி நவம்பர் 7-ந்தேதி கமல்ஹாசன் பிறந்தநாளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், இப்படத்தில் இணைந்துள்ள படக்குழுவினரை தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.