Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கமல் 233 வது படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?வைரலாகும் தகவல்

kamalhaasan-movie title update

“தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கமல், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து கமலின் 233-வது படத்தை ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்குகிறார்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘தலைவன் இருக்கின்றான்’ என தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.”,

kamalhaasan-movie title update
kamalhaasan-movie title update