Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரஜினி மற்றும் கமல் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தால் எந்த கேரக்டர் நடித்திருப்பார்கள் தெரியுமா? வைரலாகும் சுவாரஸ்ய தகவல்

kamalhaasan speech ponniyin selvan audio launch and trailer

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். பொன்னியின் செல்வன் இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, “எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. என்னுடைய மணிரத்னம் கதை பற்றி சொல்ல நிறைய உள்ளது. இதை எம்.ஜி.ஆர் வாங்கி வைத்திருந்தார். அவர் சீக்கிரம் எடுத்துவிடு என்று சொன்னார் அப்போது புரியவில்லை. ஆனால், அந்த எண்ணம் அனைவருக்கும் வந்து விட்டது. நான் முயற்சி செய்தேன். ஆனால், என்னால் எடுக்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. சிறந்த மனிதநேய விருதை பெற்றார் நடிகர் சௌந்தரராஜா மணிரத்னம் வெற்றி பட்டியலில் முக்கிய படமாக இது இருக்கும். இது ஒரு சிறிய குடும்பம். இதில் பொறாமை பட நேரமில்லை.

அதை இளம் வயதில் புரிந்து கொண்டவர் நானும் ரஜினியும். வந்திய தேவன் கதாப்பாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்க வேண்டும் என சிவாஜி சொன்னார். அதை கேட்ட எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன்னா, அந்த கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்றிருந்தேன். சரி சிவாஜி சாரே ரஜினினு சொல்லிட்டாரேன்னு அதை விட்டுவிட்டு.. அப்ப எனக்கு என்ன கேரக்டர்ன்னு கேட்டேன்? நீ அருண்மொழி வர்மன் கேரக்டர் செய் என்றார்.

அது அன்று நடக்காமல் போனது. இன்று. ரஜினி செய்ய நினைத்த கேரக்டரில் கார்த்தியும், எனக்கான கேரக்டரில் ஜெயம்ரவியும் நடிக்க கிடைத்துள்ளது. வெற்றி வரும், தோல்வி வரும் ஆனால், அதை புரிந்துகொள்ள வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மானின் ஒவ்வொரு பாட்டும் என்னுடைய இதய துடிப்பை அதிகரித்தது. நீங்கள் எனக்காக போட்ட பாடலை நான் திரும்ப திரும்ப கேட்டு வந்தேன்” என்று கூறினார்.

 kamalhaasan speech ponniyin selvan audio launch and trailer

kamalhaasan speech ponniyin selvan audio launch and trailer