Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை கங்கனாவும் போதை பொருள் அடிமையா! அவரே கூறிய வீடியோ பதிவு ட்ரெண்டிங்

நடிகை கங்கனா ரனாத் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்பவர், மேலும் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பாலிவுட் திரையுலகம் மற்றும் மும்பை போலீஸ் மீது குற்றசாட்டுகளை தெரிவித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாத்தின் குற்றசாட்டுகள் அனைத்தும் மிக சர்ச்சையாக மாறியது.

மேலும் நடிகை கங்கனா ரனாத்திற்கு சொந்தமான மும்பை அலுவலகத்தை இடித்து நொறுக்கினர், பின்பு அது மிக பெரிய சர்ச்சையாக வெடித்தது.

அதனை தொடர்ந்து பாலிவுட் நடிகையான ரியா சக்கர்பர்த்தி போதை பொருள் வழக்கில் காவல் துறையினரிடம் சிக்கிக்கொண்டதை நாம் அறிவோம்.

இந்நிலையில் நடிகை கங்கனா மற்றவர்களையும் போதை பொருள் சோதனைக்குள்ளாக வேண்டும் என கூறியுள்ளது சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.

இதனிடையே அவர் எப்போதோ ஒரு வீடியோவில் தானும் போதை பொருள் அடிமை என பேசியுள்ளார், அந்த வீடியோ பதிவை கங்கனாவை எதிர்ப்போர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.