சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்திலும் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
மேலும் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு ,ரெடின் கிங்ஸ்லி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. சமீபத்தில் இந்த படம் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட குழு வெளியிட்டு இருந்தது.
தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 20ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.