தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்களை தொடர்ந்து அடுத்ததாக கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் 3டி தொழில் நுட்பத்தில் கிட்டத்தட்ட பத்து மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். தற்போது பிளாஷ் பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நட்டி நடராஜ் படத்தின் வில்லனாக நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 80 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் படத்தின் கிளிம்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாள் விருந்தாக வெளியானது.
இந்த வீடியோ வெளியான 4 நாட்களில் மூன்று கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் அதிகம் பார்வையாளர்களை பெற்ற நம்பர் ஒன் கிளிம்ஸ் வீடியோவாக கங்குவா இடம் பெற்றுள்ளது. இந்த விஷயம் சூர்யா ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.