தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி தற்போது கங்குவா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதை, தற்போதைய கதை என இரண்டு விதமான கதையுடன் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் சூர்யா டபுள் கெட்டப்பில் இருப்பது இந்த தகவலை மேலும் உறுதி செய்துள்ளது.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ഹൃദയം നിറഞ്ഞ വിഷു ആശംസകൾ!
ਨਵਾ ਸਾਲ ਮੁਬਾਰਕ! &
Happy Ambedkar Jayanthi! #Kanguva pic.twitter.com/MtTGPnzxw3— Suriya Sivakumar (@Suriya_offl) April 14, 2024