தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் “கங்குவா” திரைப்படத்தில் தனது 42வது திரைப்படத்தை நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோகிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
3டி தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் பலவித பரிமாணங்களில் நடித்து வரும் சூர்யாவுக்கு படத்தில் ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருவதை தொடர்ந்து பாடல் காட்சி காண அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் கொடைக்கானலில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்ததை தொடர்ந்து தற்போது லேட்டஸ்ட் தகவலாக இப்படத்தில் கே ஜி எஃப் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்திய நடிகர் அவினாஷ் இணைந்திருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பதிவுகளும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
KGF Fame Actor B.S.Avinash Workout For #Kanguva 💪🏻🔥@Suriya_offl #VaadiVaasal #Rolex pic.twitter.com/asobP6Qrcq
— Rolex_Sai🔥 (@saisurya_sfc) June 21, 2023