Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கங்குவா படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழு.

kanguva-movie-new-poster

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் 3டி தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாக படுத்தியது. மேலும் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்த நாளான வரும் ஜூலை 23-ஆம் தேதி வெளியாகவுள் ளதாக நேற்றைய தினம் சிறப்பு போஸ்டருடன் அறிவித்திருந்தது.

இந்த போஸ்டர் இணையதளத்தில் பயங்கரமாக வைரலாகி வரும் நிலையில் தற்போது குதிரையின் மீது நீண்ட முடியுடன் சூர்யா அமர்ந்து செல்வது போன்று வித்தியாசமான லுக்கிலுள்ள சிறப்பு போஸ்டரை மீண்டும் வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.