இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
‘கங்குவா’ திரைப்படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது. கங்குவா போஸ்டர்இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, கங்குவாவின் வலிமைமிக்க ‘உதிரன்’ நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. கையில் ரத்தத்தில் நனைந்த தங்க காசுகள் உள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
The mighty #Udhiran of Kanguva will be revealed tomorrow at 11 am🔥
Stay Thrilled! #Kanguva 🦅@Suriya_offl @DishPatani @directorsiva @ThisIsDSP @GnanavelrajaKe @UV_Creations @KvnProductions @NehaGnanavel @saregamasouth pic.twitter.com/gJuNNQpGrl
— Studio Green (@StudioGreen2) January 26, 2024