Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு, வைரலாகும் அறிவிப்பு

kanguva movie release date official announcement

கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படமும் அந்த தேதியில் வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதனால் படக்குழு ரிலீஸ் தேதியை மாற்றப்படும் என்ற முடிவை எடுத்திருந்தது தற்போது இந்த படம் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று வெளியாகும் என்ற தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.