தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது கங்குவா என்ற திரைப்படம் உருவாகி ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா பல வேடங்களில் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தேதியில் வேட்டையன் திரைப்படம் வெளியாக இருப்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தீபாவளிக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தை செப்டம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட குழு முடிவு எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதே தினத்தில் தான் விஜய்யின் கோட் திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
