நாயகன் சூர்யா கோவாவில் போலீசாரால் முடியாத விஷயங்களை பணம் பெற்றுக் கொண்டு செய்து முடித்து வருகிறார். இவருக்கு உதவியாளராக யோகி பாபு இருக்கிறார். வெளிநாட்டில் உள்ள ஒரு ஆராய்ச்சி கூடத்தில் இருந்து தப்பித்த சிறுவன் ஒருவனை சூர்யா காப்பாற்றுகிறார். அந்த சிறுவனை சூர்யா தொட்ட பிறகு, சூர்யாவிற்குள் முன் ஜென்ம விஷயங்கள் நியாபத்திற்கு வருகிறது.
இறுதியில் அந்த சிறுவனுக்கு சூர்யாவிற்கு என்ன சம்பந்தம்? அந்த சிறுவன் யார்? எதற்காக ஆராய்ச்சி கூடத்தில் இருந்து தப்பித்தான்? ஆராய்ச்சியின் பின்னணி என்ன?
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சூர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நிகழ்கால சூர்யாவை விட, பிளாஷ்பேக் சூர்யா நடிப்பில் அதிகம் ஸ்கோர் செய்திருக்கிறார்.
குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். ஆனால், படம் முழுக்க அதிக காட்சிகளில் கத்திக் கொண்டே இருக்கிறார்.
நாயகியாக நடித்து இருக்கும் திஷா பதானி கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த பட்டிருக்கிறார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரின் காமெடி ஒர்க்கவுட் ஆகவில்லை பாபி தியோல் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
வரலாற்று பின்னணியை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சிவா. முதல் பாதி 20 நிமிடம் நம் பொறுமையை சோதித்து இருக்கிறார். ஃபிளாஷ்பேக் காட்சிகள் ஒரு சில இடங்களில் பிரம்மாண்டமாக இருந்தாலும், அழுத்தமான காட்சிகள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. தேவை இல்லாத காட்சிகளை வேண்டும் என்றே திணித்தது போல் அமைந்திருக்கிறது இயக்குனர் சிவா படங்களில் எமோஷனல் காட்சிகள் அதிகம் ரசிகர்களை கவரும் ஆனால் இந்தப் படத்தில் எமோஷனல் ஒட்டவில்லை. கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக உள்ளது அதுபோல் அடுத்த பாகத்திற்கான லீட் சிறப்பு
படத்திற்கு பெரிய பலம் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை தான். பின்னணி இசையையிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் வெற்றியின் கேமரா அழகாக படம் பிடித்து இருக்கிறது.
கங்குவா திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.