தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் “கங்குவா” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோகிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
3டி தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் பலவித பரிமாணங்களில் நடித்து வரும் சூர்யாவுக்கு படத்தில் ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் பாடலுக்கான படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்டமான செட்டில் சமீபத்தில் நடைபெற்று வந்திருந்த நிலையில் தற்போது அப்பாடல் குறித்த சில சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அதன்படி கங்குவா படத்தில் பாடல் காட்சி காண படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்து விட்டதாகவும் இதனை ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலை இயக்கிய நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித் வடிவமைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அப்பாடல் மற்றும் அப்பாடலின் படப்பிடிப்பு காட்சிகள் அற்புதமாக உருவாகி இருப்பதாகவும் இதில் சூர்யாவின் தோற்றமும் அவரது நடனமும் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.