தமிழ் சினிமாவில் முக்கியமான டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 3டி தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் புகைப்படத்துடன் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதன்படி, கொடைக்கானலில் நடைபெற்று வந்த கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை தயாரிப்பு நிறுவனம் twitter பக்கத்தில் தெரிவித்து படக்குழுவினரின் மகிழ்ச்சியான தருணத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களின் இடையே ட்ரெண்டிங்காகி வருகிறது.
Siruthai Siva Team wrap up click of #Kanguva Kodaikanal schedule today! 🔥💪
Thanks to @StudioGreen2 🙏- Looking forward to meeting this amazing team again in the next schedule soon.
From the left – Art Director #Milan, Captain @directorsiva, @Suriya_offl, #SupremeSundar and… pic.twitter.com/WXWNX05K9R
— Supreme Sundar (@supremesundar) May 12, 2023