தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகி அக்கா ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்தார். அவருக்கு தங்கையாக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் கண்மணி மனோகர் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் இருவரும் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ரோஷினி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் கண்மணி மனோகர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நடித்து வருகிறார்.
தற்போது இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியது ஏன் என தெரிவித்துள்ளார். அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நடிப்பதற்காகத்தான் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார். இரண்டு சீரியலிலும் ஒரே நேரத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என்பதால் விலகிக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

kanmani-manohar-about-bharathi-kannamma