கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக உள்ளவர் தான் சுவாதி சதீஷ். இவர் கன்னடத்தில் ஒரு சில படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார். பெங்களூரில் வாழ்ந்து வரும் சுவாதி சதீஷ்க்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு பல் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.
அங்கு சுவாதி சதீஷ்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மருந்துக்கு பதிலாக ஊசியை செலுத்தி கொள்ளும்படி சுவாதி இடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சுவாதியும் அந்த ஊசியை மருத்துவர் கூறியபடி செலுத்திக் கொண்டிருக்கிறார். அதன்பின் ஸ்வாதிக்கு முகத்தில் ஒரு பக்கத் தாடையில் வலி ஏற்பட்டதுடன் முகம் பெரிதாக வீங்கி முகத்தின் அமைப்பு மாறி உள்ளது.
அதையடுத்து அந்த மருத்துவரிடம் சுவாதி கேட்டபோது முகத்தில் உள்ள வீக்கம் விரைவில் சரியாகிவிடும் என்று பதிலளித்திருக்கிறார். ஆனால் தற்போது வரை சுவாதிக்கு முக வீக்கம் குறையவில்லை. பின்னர் மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்ட போது யாரும் சரியான பதிலை கொடுக்கவில்லை என்று நடிகை ஸ்வாதி அவர்கள் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். இதனால் அவர் கவலையுடன் வீட்டை விட்டு வெளியே வராமல் கடந்த 20 நாட்களாக அடைந்து இருக்கிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
