மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’. இப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். கண்ணை நம்பாதே மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ‘ இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது.
கண்ணை நம்பாதே போஸ்டர் இதையடுத்து, இப்படத்தின் முதல் பாடலான ‘குருகுரு’பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘கண்ணை நம்பாதே’ படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘கதிரு’ பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
The next song from #KannaiNambathe, #Kathiru will be out tomorrow.
Movie in cinemas from March 17th! @Udhaystalin @lipicinecrafts @mumaran1 @im_aathmika @Prasanna_actor @bhumikachawlat @Act_Srikanth @actorsathish @SubikshaOffl @saregamasouth @kalaignartv_off @DoneChannel1 pic.twitter.com/l6d2iRB1hr
— Red Giant Movies (@RedGiantMovies_) March 14, 2023