தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து முடிந்ததைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் டெலிகாஸ்ட் ஆகிக்கொண்டே இருக்கிறது. இதில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று உள்ளார் கவிஞர் சினேகன். இவருக்கும் கன்னிகா என்ற இளம் நடிகைக்கும் சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது.
அதற்கு சினேகன் பிக்பாஸ் வீட்டிற்குச் சென்று விட்ட நிலையில் தனியாக இருக்கும் அவரது மனைவி 24 மணி நேரமும் பிக் பாஸ் நிகழ்ச்சியையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட நீலாம்பரி போல மாறி விட்டேன் என கூறியுள்ளார்.
மேலும் சினேகன் தற்போது முதிர்ச்சியோடு விளையாடுவதாக பலரும் கூறி வருவதை கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.