Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிகினி உடையில் போஸ் கொடுத்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட நடிகை

kannum kannum kollaiyadithaal actress bikini photos

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரீத்து வர்மா.

இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமான அவர், தற்போது கவுதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகிலும் பிசியான நடிகையாக வலம்வருகிறார் ரீத்து வர்மா.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால், வீட்டிலேயே இருக்கும் நடிகை ரீத்து வர்மா, சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிகினி உடையில் போஸ் கொடுத்தவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ரீத்து வர்மா. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.