Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காந்தாரா 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் எப்போது தெரியுமா?படக்குழு அறிவிப்பு

கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ‘காந்தாரா’ டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.

ரூ.8 கோடி செலவில் தயாரான ‘காந்தாரா’ திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில், ‘காந்தாரா 2’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் 27-ஆம் தேதி நண்பகல் 12.25 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும், இந்த போஸ்டரில் ‘இது வெறும் வெளிச்சம் அல்ல தரிசனம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Kantara 2 Movie first look poster update
Kantara 2 Movie first look poster update