Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காந்தாரா 2 படத்தின் ஷூட்டிங் அப்டேட் வைரல்

kantara-movie latest update

கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ‘காந்தாரா’ டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இப்படத்திற்கு ‘காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1′ என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு சமீபத்தில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பகிர்ந்து அறிவித்தது.இந்நிலையில், காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1’ திரைப்படத்தின் கதை 1970 -80 காலகட்டத்தில் நடைபெறுவது போன்று அமைந்துள்ளதால் இதற்கான பிரமாண்ட செட் அமைக்கும் பணி மங்களூரில் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

kantara-movie latest update
kantara-movie latest update