கன்னட மொழியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருந்த திரைப்படம் தான் காந்தாரா. விஜய் கிராகந்தூர் தயாரிப்பில் பி. அஜெனீஷ் லோக்நாத் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தில் ரிஷப் செட்டியுடன் இணைந்து கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி மற்றும் நடிகை சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்த இப்படம் கன்னட மொழியில் மட்டும் 150.ரூ கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும் இப்படம் கன்னட மொழியில் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டு ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது.
தற்போது இப்படம் அமேசான் பிரைம் OTT தளத்திலும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இப்படம் இந்தி மொழியில் டிசம்பர் 9 ஆம் தேதி netflix OTT தளத்தில் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை அந்நிறுவனம் பதிவின் மூலம் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Now screaming because Kantara is now streaming 🔥#KantaraOnNetflix pic.twitter.com/bras6vje2h
— Netflix India (@NetflixIndia) December 9, 2022