கொரோனா நோய் தொற்றால் இந்தியாவில் இதுவரை 1.44 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை இறந்துள்ளனர்.
ஹாலிவுட் சினிமா பிரபலங்கள் சிலருக்கும் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிலர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.
அண்மையில் தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டில் பணியாளர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளரும் இயக்குனரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான கரண் ஜோஹர் வீட்டில் பணியாளர்கள் இருவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு வீடு முழுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டதாம்.
அத்துடன் சக பணியாளர்கள் அனைவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாம். மேலும் கரண் ஜோஹர் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளும் செயலில் இறங்கிவிட்டாராம்.