Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

என்ன திட்டாதீங்க எப்போவ் – கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்

Karnan film actor Natty Natraj tweeted

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த 9-ந்தேதி ரிலீசான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

கர்ணன் படத்தில் தனுஷை அடுத்து நடிப்புக்காக அதிகமான பாராட்டுகளை பெற்றவர் என்றால் அது நட்டி நட்ராஜ் தான். போலீஸ் அதிகாரி வேடத்தில் திறம்பட நடித்திருந்தார்.

இந்நிலையில், கர்ணன் படம் பார்த்தவர்கள் தனக்கு போனில் மெசேஜ் அனுப்பி திட்டுகிறார்கள் என நட்டி நட்ராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது: “என்ன திட்டாதீங்க எப்போவ், ஆத்தோவ், அண்ணோவ், கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன். போன் மெசேஜ்ல திட்டாதீங்கப்பா. முடியிலப்பா, அது வெறும் நடிப்புப்பா, ரசிகர்களுக்கு எனது நன்றி”. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.