தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
பொன்னியின் செல்வன் சர்தார் உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக ஜப்பான் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் நடிகர் கார்த்தி ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் அவரது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக தன்னுடைய பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் கார்த்தியின் முகநூல் பக்கத்தில் வெளியாகும் பதிவுகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Hello guys, my Facebook page has been hacked. We are trying to restore it with Fb team.
— Karthi (@Karthi_Offl) November 14, 2022