Iமணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 21ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியான “சர்தார்” திரைப்படம் ரசிகர்களின் இடையே வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்க ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரவபூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருப்பதாக ஒரு ஸ்பெஷல் வீடியோ மூலம் படக்குழு சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் கார்த்தியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த தகவலை ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.
#Sardar 💥
Once a spy, always a spy!
Mission starts soon!!#Sardar2 💥💥@Karthi_Offl @Prince_Pictures @RedGiantMovies_ @Psmithran @gvprakash @lakku76 @RaashiiKhanna @rajishavijayan @ChunkyThePanday @george_dop @AntonyLRuben @dhilipaction @kirubakaran_AKR @DuraiKv pic.twitter.com/rVu5IxGRZp— Prince Pictures (@Prince_Pictures) October 25, 2022