மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக திரைக்குவர தயாராக இருக்கும் திரைப்படம் தான் “சர்தார்”. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்க ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்து 7.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் முதலிடம் பிடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடலான “ஏறுமயிலேறி” என்ற பாடல் நேற்றைய தினம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் இடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து சர்தார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை புதிய போஸ்டர் உடன் படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இப்படம் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் உறுதியாகி உள்ளது. இதனை நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
Shifting gears makkale. Getting ready to present #SARDAR this Diwali!💥💥 @Psmithran @RaashiiKhanna_ @rajishavijayan @ChunkyThePanday @george_dop @gvprakash @AntonyLRuben @dhilipaction @Udhaystalin @iamnagarjuna @lakku76 @SonyMusicSouth pic.twitter.com/Cm7W8bZIR4
— Karthi (@Karthi_Offl) October 12, 2022