தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன்1, சர்தார் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இப்படங்களை தொடர்ந்து நடிகர் கார்த்தி வரிசையாக பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் குக்கூ, ஜோக்கர் போன்ற திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் ராஜ் முருகன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ‘ஜப்பான்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அணு இமானுவேல் கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்த நிலையில் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் இருக்கும் கார்த்தியின் போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Japan’s pongal wishes to all dear ones! pic.twitter.com/VvFecaAYZP
— Karthi (@Karthi_Offl) January 15, 2023