தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன்1, சர்தார் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இப்படங்களை தொடர்ந்து நடிகர் கார்த்தி வரிசையாக பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் குக்கூ, ஜோக்கர் போன்ற திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் ராஜ் முருகன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ‘ஜப்பான்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அணு இமானுவேல் கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கும் நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நிலவரம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வைரலாகி வருகிறது. அதன்படி ஜப்பான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளா மாநிலம் கோழிக்கூட்டில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.