தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியாத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றிருக்கும் இவர் தற்போது ஜப்பான் என்னும் தலைப்பில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அணு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி ஜப்பான் திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
#JAPAN : SEPTEMBER 15⭐
• Team Planning For SEPTEMBER 15 Grand Release in Theatres🔥
• Team Aiming 4 Days Long Weekend Holiday (Ganesh Chaturthi)BankRolled By #DreamWarriors.#Karthi | #GVPrakash | #RajuMurugan
— Saloon Kada Shanmugam (@saloon_kada) May 16, 2023