Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்த கார்த்தி

Karthi meets Chief Minister MK Stalin

திரைப்படங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு சட்டம் அமலில் உள்ளது. இதில் திருத்தப்பட்ட வரைவு சட்ட மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தின்படி சென்சார் சான்றிதழ் பெற்ற பிறகு படம் திரைக்கு வந்தாலும் அதில் ஆட்சேபணைக்குரிய காட்சிகள் இருந்தால் மத்திய அரசு பார்த்து சென்சாருக்கு மறு தணிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும்.

இந்த திருத்தப்பட்ட சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கமல்ஹாசன், அனுராக் காஷ்யப், வெற்றிமாறன், பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோர் குரல் எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி, நடிகை மற்றும் இயக்குநர் ரோஹினி, தயாரிப்பாளர் தேண்டாண்டாள் முரளி, தயாரிப்பாளர் 2D ராஜசேகர் உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலக்த்தில் சந்தித்து, ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021க்கு எதிராக முறையிட்டனர்.

திரைத்துறையின் கருத்துச் சுதந்திரத்தை மட்டுமல்ல, அதை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க, மாநில அரசு இதில் தலையிட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.