Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்த கார்த்தியின் படப்பிடிப்பு

karthi sardar movie update

தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ஒரு நல்ல படமாக பேசப்பட்டது.

இதனை தொடர்ந்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும், பி.எஸ். மித்ரன் இயக்கும் சர்தார் படத்திலும், முத்தையா இயக்கும் விருமன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.இதில் பொன்னியின் செல்வன்,விருமன் படங்களின் படப்பிடிப்பை கார்த்தி நிறைவு செய்துள்ளார்.

சர்தார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை கார்த்தி நிறைவு செய்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை கார்த்தி தொடங்கியுள்ளார் என்ற தகவலை இயக்குனர் பி.எஸ். மித்ரன் அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோவுடன் பகிர்ந்துள்ளார்.