Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாவீரன் படக் குழுவை பாராட்டி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் போட்ட பதிவு

karthik-subbaraj-twitter-post-viral-about-maaveeran

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது எஸ் கே 21 என்னும் தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் கடந்த மாதம் “மாவீரன்” திரைப்படம் வெளியானது. மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் அடித்து ரூ.89 கோடிக்கு மேல் வசூலை குவித்து ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்தது.

தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தை பாராட்டி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்து இருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர், “இப்பொழுதுதான் ‘மாவீரன்’ படம் பார்த்தேன். மக்களை வேறு இடங்களுக்கு குடியமர்த்துவதில் உள்ள அரசியலை, நல்ல முறையில் படமாக எடுத்துள்ளீர்கள். படத்தின் கற்பனையான பகுதிகள் மிகவும் அருமையாக இருந்தது, அரசியல் தாக்கமாக இருந்தது. “நீ தங்குவியா இந்த வூட்டுல?” படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்” என்று அப்படத்தின் வசனத்தையும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகிறது.