தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கஸ்தூரி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் வயல்காடு என்ட்ரியாக பங்கேற்றார்.
தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாலிவுட் நடிகரும் இயக்குனருமான அனுராக் காஷ்யப் நீது நடிகை பயல் கோஷ் என்பவர் பாலியல் புகாரை வைத்துள்ளார்.
ஆனால் அனுராக் காஷ்யப் அப்படி செய்பவர் அல்ல என பலரும் கூறி வருகின்றனர். நடிகையும் வழக்கறிஞருமான கஸ்தூரியும் அனுராக் காஷ்யப் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தேவை. இல்லையென்றால் உங்களை இப்படிப் பேச வைத்தவர்கள் முதல் அனைவரும் சிக்குவார்கள் என பதிவிட்டு இருந்தார்.
இதனை பார்த்த ரசிகர் ஒருவர் உங்களுக்கு நெருக்கமான வருவதற்கு இதே போன்ற நிலைமை ஏற்பட்டாலும் ஆதாரம் கேட்பீர்களா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு கஸ்தூரி எனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்ல.. எனக்கு நடந்துள்ளது. ஆனால் அதனை மூடிய கதவுகளுக்குப் பின்னால் மறைத்து விட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரியின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஸ்தூரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நடிகர் யார் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
ஆனால் கஸ்தூரி பதிவிட்டுள்ள இந்த பதிவில் அந்த நடிகர் யார் என்பது குறித்து பதிவிட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
So I have complete sympathy for victims of sexual harrassment. But My personal view is not law. The due process of law is designed to discourage fake allegations and must therefore stay reliant on evidence.
— Kasturi Shankar (@KasthuriShankar) September 21, 2020