தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் அம்மன் வேடத்தில் நடித்த ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது.
ஆர் ஜே பாலாஜி படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் திடீரென தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி, அம்மன் வேடத்தில் இருந்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் அவர் ’அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த சிலர் நயன்தாராவுக்கு போட்டியா என்று கருத்து தெரிவித்துள்ளார்கள். மேலும், கஸ்தூரிக்கும் அம்மன் வேடம் கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
அழகிய அம்மன் @KasthuriShankar @kasthurirasigan #kasthuri #amman pic.twitter.com/vXBc6gca3A
— Kasthuri Rasigan (@kasthurirasigan) October 27, 2020