நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை டிச.31-ந் தேதி வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் நேற்று அதிரடியாக அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்புக்கு பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், இதுப்பற்றி நடிகை கஸ்தூரி கூறியுள்ளதாவது, ”கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது. உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது. ரஜினியின் முடிவுக்கு பாராட்டுக்கள். நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழ வேண்டும்.
எதிர்பார்த்தது தான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை” என பதிவிட்டுள்ளார்.
எதிர்பார்த்ததுதான்.
எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம்.இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை ! #rajinipoliticalNOentry
— Kasturi Shankar (@KasthuriShankar) December 29, 2020
கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது.
உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது. ரஜினி அவர்களின் முடிவுக்கு பாராட்டுக்கள்.
நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழவேண்டும்.— Kasturi Shankar (@KasthuriShankar) December 29, 2020