தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக நடிகராக பயணித்து தொடங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாப்புலராகி அதன் பிறகு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்வு செய்து நடித்துவரும் கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஸ்டார் படமும் நான்கு நாளில் கிட்டத்தட்ட 16 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் ஜூன் நான்காம் தேதி படம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.