பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் “கவின் ஆர்மி” என பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர் கவின். இதற்கு முன்பே இவர் சரவணன் மீனாட்சி சீரியல் வேட்டையனாக மக்களின் மனதில் இடம் பிடித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவின் குறித்த Tagகள் டிவிட்டரில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றன. கவின் அடுத்ததாக நடித்து வந்த படம் லிஃப்ட். கொரோனாவுக்கு முன்னர் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
தற்போது இதற்கான டப்பிங் பணிகளை செய்து முடித்துள்ளாராம். இதுகுறித்து போட்டோவைவும் கவின் பகிர்ந்துள்ளார். பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்த அம்ரிதா லிஃப்ட் படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.