மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருச்செந்தூரில் நடைபெற்று வருகிறது. ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நடிகை ராதிகா, இப்படத்தில் சிம்புவின் தாயாராக நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை கயாடு லோகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மராத்தி நடிகையான இவர் ஏற்கனவே கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ள கவுதம் மேனன் மூன்று மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.