முகத்தின் அழகை பிரதிபலிக்கும் அம்சங்களில் முக்கிய பங்கு வகிப்பது உதடுகள்.
இத்தகைய உதடுகளை மென்மையாகவும், சிவப்பாகவும் பராமரிக்க சில மிக எளிதான வழிமுறைகள்.
எலுமிச்சை பழத்தை நறுக்கி அதனைக் கொண்டு உதடுகளில் தடவும் போது இறந்த செல் நீங்கி புதிய செல் உருவாகுகின்றன. ஆரஞ்சுப் பழச்சாற்றை உதட்டில் தடவவும் பொது உதடு நிறம் மாறும்.
மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும். புதினா இலைகளை அரைத்து உதடுகளில் தடவினால் கிருமிகள் அழிந்துவிடும்.
கற்றாழை உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும். கொத்தமல்லி இலைகளின் சாற்றை உதடுகளில் தடவினால் கருமை மறைந்து சிவப்பழகு கிடைக்கும்.
நெல்லிக்காய் சாறு உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும். பீட்ரூட் உதடுகளில் உள்ள கருமை விரைவில் மறைந்து விடும். ஜாதிக்காயை அரைத்து உதடுகளில் தடவினால் கருமை மறைந்து சிவப்பழகு கிடைக்கும்.
தினமும் நெய் அல்லது வெண்ணெய் உதடுகளில் பூசி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.
முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையை சேர்த்து உதடுகளில் பூசி வர, வறண்ட உதடுகள் அழகாகும்.