கதாநாயகியாக கமெர்சியல் படங்களில் மட்டுமே நடிக்காமல் சோலோ கதாநாயகியாகவும் படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி இடத்தை தென்னிந்திய சினிமாவில் பிடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தும் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்து வருகிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷின் சோலோ நடிப்பில் தற்போது மிஸ் இந்தியா எனும் திரைப்படம் தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறிவிட்டது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தெலுங்கு நடிகர் நிதின் என்பவருடன் நடித்து வரும் படம் ரங் டே. இப்படத்தின் லிரிகள் பாடல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த பாடலில் முதன் முறையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் நிதினுடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார் என்று சர்ச்சை எழுந்துள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..
