Tamilstar
News Tamil News

கவுதம் மேனன் படத்தில் கீர்த்தி சுரேஷ்?

கமல்ஹாசன் நடித்து 2006-ல் திரைக்கு வந்த படம் “வேட்டையாடு விளையாடு”. இந்த படத்தில் நாயகியாக ஜோதிகா நடித்து இருந்தார்.

மேலும் கமாலினி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர். கவுதம் மேனன் இயக்கியிருந்த இப்படம் நல்ல வசூல் பார்த்தது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

இந்த படத்தில் அனுஷ்காவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கீர்த்தி சுரேஷ் தற்போது, ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.