தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து டாப் ஹீரோயினியாக பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள இவரது நடிப்பில் சமீபத்தில் தமிழில் வெளியான மாமன்னன் திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சைரன், ரகு தாத்தா, கண்ணிவெடி உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் பிசியாக கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் விரைவில் பாலிவுட் திரை உலகிலும் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். உடல் எடையை முற்றிலும் குறைத்த பிறகு மிகவும் கவர்ச்சிகரமாகவும் மாறி இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வரும்.
அந்த வகையில், மாடர்ன் டிரஸ்சில் கிளப் ஒன்றில் தோழிகளுடன் மிகவும் உற்சாகத்தோடு நடனமாடும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு இணையத்தில் வேகமாக பரவி அனைவரையும் கவர்ந்து வருகிறது.
இதோ அந்த வீடியோ
Dancing Queen 😻💃❤️@KeerthyOfficial #KeerthySuresh pic.twitter.com/ehVhOdPPTB
— Keerthy Suresh FC (@onlyforkeerthy) August 23, 2023