தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் விஜய் சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட கீர்த்தி சுரேஷ் நேற்று ஓணம் பண்டிகையை குடும்பத்தோடு கோலாகலமாக கொண்டாடி உள்ளார்.
கேரளத்து புடவையில் அழகு தேவதை போல இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.