Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh latest photos

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான தசரா திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருந்த மாமன்னன் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவா இருந்து வருகிறார். அந்த வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் அழகிய ஆடையில் ரசிகர்களை திணற வைக்கும் அளவிற்கு லேட்டஸ்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.